உள்நாடு

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதலில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

நாடு திரும்பிய பிரித்தானிய இளவரசி!

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “