உள்நாடு

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்கள் 2024.07.10 ம் திகதி தமது கடமையேற்றுக் கொண்டார்.

அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் குழாம் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் சட்டத்தரணி. பிர்னாஸ் இஸ்மாயில் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் எம். ராமக்குட்டி, கணக்காளர் எஸ்.எம். ஹாறுன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். சப்ரி நிருவாக உத்தியோகத்தர் நிருவாக உத்தியோகத்தர் கிராம நிலதாரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

– நூருல் ஹுதா உமர்

Related posts

கோட்டாபய அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!

editor

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லொறிகள் – முக்கிய நபர் கைது

editor