வணிகம்

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மொனறாகலை விவசாய நாற்று பயிர்ச்செய்கை மத்திய நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட உயர்தரமான இராசவள்ளிக்கிழங்கு வகைகள் காலி மத்திய விவசாய வலயத்தில் பயிரிடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட 150 விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான நாற்று வகைகள் வழங்கப்பட்டதாக லபுதூவ பிரதி விவசாயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கிராமிய விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

PCR பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலையில் ஆய்வுக்கூடங்கள்

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க்

பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் சிறந்த முதல் மூன்று நிறுவனங்களுக்குள் மீண்டுமொருமுறை இடம்பிடித்த HNB