உள்நாடு

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (09) திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை  (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஒன்றே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார்  விரைந்துள்ளதையடுத்து, நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருவதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கம் உலர் உணவு வழங்கி வைப்பு

editor