உள்நாடு

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை  வழங்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இலங்கை தோட்ட அதிகார சபையின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

தோட்டத் தொழிலாளர்கள் அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டபோது, ​​தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தண்ணீர் பீச்சு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

அதன் பின்னர், கொழும்பு 7 இல் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக புகைப்படங்கள் மற்றும் எதிர்ப்பு பதாகைகளை எரித்தனர்.

இதையடுத்து தோட்ட தொழிலாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

editor