உள்நாடுசூடான செய்திகள் 1

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த மனுக்களை  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்மன் சூரசேன, S.துரைராஜா ஆகியோர் ஆராய்ந்தனர்.

முதலில் வியாக்கியானம் கோரி மனு தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் முதல் மனுவில் மேலும் கோரப்பட்ட்டிருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.இந்த பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Related posts

மாலக சில்வா பிணையில் விடுதலை

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!