அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என ஒரு சூழமைவிலும் 6 வருடங்கள் என இன்னுமொரு சூழமைவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்திற்கு தீர்வை காண்பது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார் என  தெரிவித்துள்ள அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான யோசனை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம்  விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் ஆரம்பமானது…

புத்தாண்டின் சுப நேரங்கள்

6,000 அரச ஊழியர்களை நிரந்தரமாக்க தீர்மானம்

editor