உள்நாடு

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.

(UTV | கொழும்பு) –

சாப்பாட்டு தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்த ஷயனி மெதும்சா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொசன் போயவை முன்னிட்டு பாணந்துறையில் கடந்த 23 ஆம் திகதி சாப்பாட்டு தன்சல் ஒன்று இடம்பெற்றது.

இதற்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றிலேயே சிறுமி விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நிலைமை மோசமாக இருந்ததால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஹரிணி விசேட அறிவிப்பு

editor

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி