உள்நாடு

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு : பதற்றமான சூழ்நிலை

(UTV | கொழும்பு) –  கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சிறப்பு தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒவ்வொரு மாதமும் கடன், கடன் சேவை விவரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு