உள்நாடு

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு மீண்டும் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஜூலை மாதம் 01ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது. இன்றையதினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ரிட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொவிட் 19 : அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை