உள்நாடுசூடான செய்திகள் 1

மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் கைது!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபான சாலை திறக்கப்பட்டதையடுத்து அதில் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 13நபர்களை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (25)இடம்பெற்றது. இதில் 9ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் இதில் 5 ஆண்களை பாதுகாப்பு நிமித்தம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக் குறித்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

editor

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்