உள்நாடு

தேர்தல் நடத்துவதில் சிக்கலா? IMFயின் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்  மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் எனவும், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 பேர் கைது

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

editor