உள்நாடுசூடான செய்திகள் 1

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன்  பஹ்மி ஹசன் சலாமா  இம்மாதம் ஜூன் 15ஆம் திகதி  பாக்கு நீரிணையை நீந்திக்  கடக்கும்  சாதனையை நிகழ்த்த உள்ளார் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர் கடந்த மூன்று  மாதங்களாக  இந்தச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல் முனையில்  இருந்து  தலைமன்னார்  வரையான 32 கிலோமீட்டர்  தூரத்தை  8 மணி நேரத்தில் தாம் கடக்க  எண்ணியுள்ளார் என்று  புதனன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  சலாமா கூறினார்.

கடந்த 18ஆம் திகதி இவர்  பாக்கு நீரினையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையிலான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளார். இவருக்கான  நீச்சல் பயிற்சிகளை   விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி  வருகின்றார்.

இந்தப் பயிற்றுநர் 2021 ஆம்   தலைமன்னாரில்  இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும்  அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணித்தியாலயம்  19 நிமிடம்  58 செக்கனில் நீச்சாலை நிறைவு செய்து ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணி நேர சாதனையை  முறியடித்த சாதனையாளர் ஆவார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்  பாக்கு நீரிணையை நீந்திக்  கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தனவந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்மி ஹசன் சலாமா வுக்கு பாதுகாப்புப் படை,விளையாட்டு அமைச்சு மற்றும் இச்சாதனை ஒளிப்பதிவு இவருடன் மேலும் கண்காணிப்பு ஊடக போன்ற விடயங்களுக்கு அனுமதி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பாடசாலை மட்டத்தில் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிக் கின்னங்களையும் பெற்றுள்ளர். இவரின் தந்தை, மற்றும் பயிற்றுவிப்பாளர், இவரது பாடசாலை அதிபர் ஆகியோர்களும் இவருக்கு உந்து சக்தியாக உள்ளார்.

(அஷ்ரப்  ஏ சமத்)

Related posts

அஸ்வெசும கொடுப்பனவுகளை தடையின்றி பெற்று கொள்ள ஏற்பாடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

அரசாங்கத்தின் அடுத்த இலக்கு குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது