அரசியல்உள்நாடு

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள போதும், அதனை மீறும் வகையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]