வகைப்படுத்தப்படாத

மாகெலிய நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன மருத்துவரின் சடலம் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – அகலவத்தை – தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் மொழி பயிற்சிக்காக சென்றிருந்த நிலையில் , மாகெலிய நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயிருந்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

27 வயதுடைய குறித்த மருத்துவர் மாகெலிய நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ள நிலையில் அங்கு அவர் கால் தவறி நீர்வீழ்ச்சின் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

பின்னர் பிரதேசவாசிகள் , கடற்படை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்து இன்று மருத்துவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல்

மாணவி உயிரோடு எரித்து படுகொலை…

Highest rainfall reported in Dunkeld estate