வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அழிக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் திருமண மண்டபம் ஒன்றே இடிந்து வீழ்ந்த நிலையில், அங்கு திருமண நிகழ்வொன்று இடம்பெற்றிருந்த சமயத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தால் பாரிய உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.

எனவே இவ்வாறான சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழி என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குண்டு வீச்சு தாக்குதலில் 29 குழந்தைகள் உயிரிழப்பு

“Baby Driver 2” could happen fairly soon

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…