உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயதாஸவுக்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

BREAKING NEWS – வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

editor

எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது