உள்நாடு

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

இலங்கையில் வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், சந்தை தேவையை கருதி பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என கார் இறக்குமதியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அதற்கான குழு பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

கல்முனையில் – கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கோர விபத்து | வெளியானது CCTV காட்சி

editor

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு