உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி செவ்வாய்க்கிழமை (04) காலை தீடிரென வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் தலைமை விமானப்படையைச் சேர்ந்தவரிடம்  இருந்த T-56 ரக துப்பாக்கி தவறுதலாக காலை 10.30 மணியளவில் வெடித்துள்ளது என்றும் இதனால்,  உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் சிறப்பு விசேட விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.

கடமையில் இருந்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு – உயர் நீதிமன்றின் உத்தரவு!

editor

தனது பேராயர் காலத்தை நிறைவு செய்வாரா? குழப்பத்தில் கர்தினால்

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

editor