உள்நாடு

தியத்தலாவை கோர விபத்து : சாரதிகள் கைது

தியத்தலாவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய பந்தய கார்களின் சாரதிகள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டுக்கான “பொக்ஸ் ஹில்”கார் பந்தியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (22) பதுளை தியத்தலாவையிலுள்ள கார் பந்தியத் திடலில் இடம்பெற்றன.இதன்போது, எதிர்பாராத விதமாக பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கரொன்று பந்தயத்திடலை விட்டு விலகி அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.8 வயது சிறுமி, 4 போட்டி உதவியாளர்கள், இரு பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பந்தயக் காரொன்று பந்தய பாதையில் இருந்து விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.இந்நிலையில், “Fox Hill Super Cross 2024” கார் பந்தயப் போட்டி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார் – சஜித்

editor

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

editor