உள்நாடு

சஜித் – அநுரவின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுனர் நவீன் திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் எந்தத்துறையில் பட்டம் பெற்றவர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பவருக்கு குறைந்தபட்சம் ஒரு இளநிலை பட்டமேனும் இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவரை நியமிக்கும் போதும் பட்டமொன்று இருக்க வேண்டியது அவசியமானதாகும் என தெரிவித்துள்ளார்.

எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பட்டங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு மிகவும் அன்புடன் கோருவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி