உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தோடு கலந்துரையாடி சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில்  மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவுள்ளன.

இந்த பணிகளில் 5,580 பொலிஸார், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சுனாமி வந்த போது கூட நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை – இந்த வருட இறுதியில் நாட்டில் பாரிய நிதி நெருக்கடி உருவாகும் – வஜிர அபேவர்தன

editor

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

editor