உள்நாடு

முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

இந்த ஆண்டு ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை சந்திக்க சந்தர்பம் வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 11 ஆம் திகதி ரமழான் பண்டிகையை முன்னிட்டு, அன்றைய தினம் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை மட்டுமே சந்திக்க முடியும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கைதிகளின் உறவினர்கள்  உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மட்டுமே கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள விதிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் அவற்றை வழங்க அனைத்து சிறைச்சாலைகளிலும் முடியும்  எனவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வலுக்கும் கொரோனா

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

அத்தனகல்லை அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமனம்