உள்நாடு

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…

சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்து. பலருக்கு காயம். சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர் . கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா

editor

வசந்த முதலிகேவுக்கு 03 வழக்குகளில் பிணை- Video