உள்நாடு

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி – நளின் பெர்னாண்டோ கருத்து

டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக குறைந்துள்ளது . ஆகவே இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையும் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், சந்தையில் 70 – 75 ரூபா வரை விலை உயர வேண்டிய ஒரு முட்டையின் விலையானது அரசாங்கம் முட்டைகளை இறக்குமதி செய்வதால் 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் மற்றும் இறக்குமதி பொருட்களான மரக்கறிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியதையடுத்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நடுத்தர அளவிலான இளஞ்சிவப்பு வெங்காயத்தின் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

editor

ஒருபோதும் இனவாதத்தை கையில் எடுக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

editor

ரயில் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு; வர்த்தமானி அறிவித்தல்