உள்நாடு

சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்கு வங்கியை விட சற்று கூடுதல் வாக்கு அந்தக் கட்சிக்குக் கிடைக்கும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

வடக்கில் எமக்கே ஆதரவு உள்ளது. இனவாதக் கட்சிகளுக்கு அந்த மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர்.

அனைத்து இனத்தவர்களும் அங்கம் வகிக்கக் கூடிய கட்சி எமது கட்சியாகும். அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்கு செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

Related posts

எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பில்லை – கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறுகிறார்

editor

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் – கண்டுகொள்ளாத ஆதம்பாவா எம்.பி

editor