உள்நாடு

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேர  சுற்றிவளைப்பின் மூலம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும், போலியான அனுமதி பத்திரத்துடன் பயணித்த டிப்பர் ஒன்றும் தருமபுரம் பொலிசாரல் இவ்வாறு செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேச நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

குறுகிய நாட்களுக்குள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு!