உள்நாடு

பொத்துவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை கொன்ற நபர் விடுதி

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற நபர் விடுதி அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்தே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த நபர் , பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

 

அறையின் குளியலறையில் குறித்த ஆண்ணின் சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

மஹகலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற 57 வருடங்கள் சென்றது – எங்களுக்கு வெறுமனே 7 மாதங்களில் 4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன – திலித் ஜயவீர எம்.பி

editor