உள்நாடுவகைப்படுத்தப்படாத

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை நடத்த தீர்மானம்!

வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் அண்மையில் நடைபெற்றதுடன், அந்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

மீண்டும் இலங்கை வரும் இளையராஜா!