உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு?

மின்சார கட்டணம் 18% குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்த போதிலும், இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 14% மின்சார கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (28) கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று (29) இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளைய தினத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை..!

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் செவிப்புலன் பரிசோதனை