வகைப்படுத்தப்படாத

முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா, கடந்த வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
அத்துடன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி .எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் கட்சியின் முதளைப்பாளி அமைப்பாளர் தௌபீக், முபாரிஸ், இணைப்பாளர் மதீன், முன்பள்ளி ஆசிரியை ஜிப்ரியா, மௌலவி பஸால் சலபி, சாஹூல் ஹமீட், கவிக்குரல் மன்சூர் மற்றும் கவிஞர் முனவ்பர்கான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 

Related posts

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්