வகைப்படுத்தப்படாத

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

(UTV | கொழும்பு) –   யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த  ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.

இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதின் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார்.

திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர் பிடிபட்டுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட ஐ போன் உரிமையாளரின் கைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Manmunai North Secretarial Division emerge champions

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

Anjalika bags women’s singles crown