உள்நாடு

இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!

(UTV | கொழும்பு) –

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு விசேட விளக்கமளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இந்திய கடற்படையின் இந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் – உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதி

editor

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்