உள்நாடு

பலாங்கொடையில் முற்றாக தீக்கிரையாகிய வீடு!

(UTV | கொழும்பு) –

பலாங்கொட பிரதேசத்தில் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பின்னவல பொலிஸர் தெரிவித்தனர். பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றில் இத்தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனால் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைகள் என்பன முற்றாக தீயில் எரிந்துள்ளன. இதனால் குறித்த குடும்பம் நிர்க்கதியடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி

editor

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்