உள்நாடு

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

நுவரெலியா – ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்குவழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா – ஹட்டன் குறுக்குவழியில் வீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அந்த வீதியில் பொலிஸார் இல்லாத வேளையில் ​​கனரக வாகனங்களை ரகசியமாக பயன்படுத்தும்போது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தது.

இந்த வீதியைச் சேர்ந்த நானுஓயா பொலிஸாரிடம் வினவிய போது, ​​பொலிஸாரைப் பொருட்படுத்தாமல், அங்கு பொருத்தப்பட்டுள்ள பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டால், சாரதியை வாகனத்துடன் கைது செய்து முன்னிலைப்படுத்துவோம் என தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்