உலகம்

நைஜீரிய படகு விபத்தில் 100 பேர் மாயம்!

(UTV | கொழும்பு) –

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதுடன் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் போா்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜா் ஆற்றின் வழியாக அப்படகு நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தபோது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான ஆட்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், வேகமான காற்று அடித்தபோது, காற்றைத் தாங்காமல் அப்படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நியூசிலாந்து – ஓக்லாந்து நகரம் மீண்டும் முடக்கம்

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்