உள்நாடுசூடான செய்திகள் 1

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

(UTV | கொழும்பு) – மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் இன்று சகல மரக்கறிகளும் இவ்வாறான விலைக்கு விற்க பட்டது.

கத்தரிக்காய் கிலோ ஒன்று 640/=ரூபாவாகவும், போஞ்சி கிலோ ஒன்று 960/= ரூபாவாகவும், பச்சை மிளகாய் கிலோ ஒன்று 2100/= ரூபாவாகவும், ஈர பிழாக்காய் ஒன்று 240/= ரூபாவாகவும், முட்டை கோவா கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும், கேரட் கிலோ ஒன்று 960/=ரூபாவாகவும், தக்காளி கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும், பீட் கிலோ ஒன்று 720/= ரூபாவாகவும், மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்ய பட்டு வருகிறது.

என்றுமே இல்லாத வாறு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகள் விலை அதிகரித்து உள்ளது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி பலி

editor

ஜனாதிபதி நாளை ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் விசேட உரை