(UTV | கொழும்பு) –
முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்த்தென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.
பிரச்சிதமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து தருணங்களிலும் ஒரு நாடாக சரிவைச் சந்திக்க நேரிட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார
இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,
மக்கள் எப்போதும் பிரச்சிதமான தீர்மானங்களை விரும்புகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளிடமிருந்து பிரச்சிதமான தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பிரபலமான தீர்மானங்கைளை நோக்கிச் செல்லும் போது, நாம் அவற்றில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு கூறினோம். ஆனால் மக்கள் பிரபலமான தீர்மானங்களையே எடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.
இதில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும்போதுஅவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதால்தான். மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர். இறுதியில், நமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து. நாடு எதிர்கொண்ட நெருக்கடியின்போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் தான் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது எனப் பின்வாங்கினர். அவர்களை போலவே ஜனாதிபதியும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால் எதிர்கட்சியினரின் பேரணிகளுக்கு பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள்.
இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம். ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம். மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன. அவ்வாறு இருந்த மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர்கள் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது, நினைத்தவாறு பணம்அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது.
கடந்த ஆண்டு இறுதியில் ஒரு டொலர் 365 ரூபாவாக இருந்தது. டொலரின் பெறுமதி 600 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை அதிகரிக்கும் என்று அக் காலத்தில் எதிர்வுகூறப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி டொலரின் பெறுமதியை சுமார் 320 ரூபாவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது. டொலரின் பெறுமதி 11% சதவீதத்தினால் குறைந்துள்ளது. இவ்வாறு நாம் அக்கால நிலைமையை மாற்றவில்லையென்றால் வெளிநாட்டில் கல்வி கற்கும் பிள்ளைக்கு பணத்தை அனுப்ப முடியாத நிலை தோன்றியிருக்கும். நாம் இந்த நாட்டை பொறுப்பேற்கும்போது, வட்டி விகிதம் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொள்கை ரீதியாக வட்டி விகிதத்தை தனி இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இப்போது வட்டி விகிதம் 9 சதவீதமாகும். வங்கியில் கடன் பெறக் கூடிய நிலைக்கு நாட்டை கொண்டுவந்தோம்.
கடந்த ஆண்டு, ஆறு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு சுமார் பன்னிரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அந்த நாடுகள் கூறும் நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கையில் எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது இந்நிலை மாற்றப்பட்டுள்ளது. எந்த நாடும் ஒரு டொலர் கூட வழங்காத நாடாக அன்று எமது நாடு இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 350 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 200 மில்லியன் டொலர்களும் உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளது.
அண்மைக்காலமாக மக்களும் “சிஸ்டம் சேஞ்” வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்போது அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. வரி சரியாக வசூலிக்கப்படுகிறது. எல்லோரும் வரி செலுத்துகிறார்கள். நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று பெரும் வரியை செலுத்துகின்றனர். சமுர்த்தி கொடுப்பது போன்று வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
இப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அனால் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள். இது இந்நாட்டில் உண்மையாக நடக்க கூடாதா? வீதிகளில் ஒழுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. கல்விக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது. உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாடு டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. வெளிநாடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්