உள்நாடு

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்

(UTV | கொழும்பு) –

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.
ஆகவே, ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை ஐனாதிபதிக்கு தெரிவிக்கவும் – என்றுள்ளது.

மேலும், ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி மேலதிக செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அழைப்புக்கு சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு பதில் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி