உள்நாடு

நாடு திரும்பிய அஷானி – அமோக வரவேட்பளித்த மக்கள்.

(UTV | கொழும்பு) –

Zee தமிழ் தொ ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையகத்தை சேர்ந்த அசானி இன்று காலை நாடு திரும்பினார்.

ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில போட்டியாளர்கள் வெளியேறி கடைசியாக  ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ்குமார், கனிஷ்கர் மற்றும் கவின் என ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர். இந்த போட்டியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 இலட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இறுதிச்சுற்றில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றிப்பெற்றார்.

அத்தோடு கண்டியை சேர்ந்த அசானியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினார் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த போட்டியாளராவார்.

இந்நிலையில் சரிகமபா இறுதிப் போட்டி நேற்று நிறைவுபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற அசானி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் ஊடாக, இன்று காலை நாடு திரும்பினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

விஜயதாஸ ராஜபக்ஷ கப்பம் பெற்றமைக்கு சாட்சி உண்டு

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு