உள்நாடு

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

(UTV | கொழும்பு) –

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை நேற்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக நேற்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது.

இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமானப் படையின் விமானம் விபத்து – L போட் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் : பிற்பகல் வாக்கெடுப்பு

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?