உள்நாடு

மகிந்தவை மீண்டும் தலைவராக்கிய மொட்டுக்கட்சி!

(UTV | கொழும்பு) –

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்போது, பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்சவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்ததுடன், அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார்.

அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று

BREAKINGNEWS | பதவியை இராஜனமா செய்த சமிந்த விஜேசிறி!