வகைப்படுத்தப்படாத

பௌத்த தேரர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பௌத்த தேரர் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையின்போது காயமடைந்த 5 காவற்துறை அதிகாரிகள் 5 பேர் நாராஹேன்பிட்ட காவற்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை ஆரமபித்தனர்.

இந்த எதிர்ப்பு பேரணியானது கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பாக இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி யூனியன் பிளேஸ் பகுதியை அண்மித்த வேளை, இப்பன்வல சந்தி பாதை மூடப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் நகரமண்டப பகுதிக்கு செல்ல முட்பட்ட வேளையில் முதலாவது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து கலைந்து சென்ற ஆர்ப்பாட்ட காரர்கள், தாமரை தடாக பகுதியின் அருகில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை ஊடாக மீண்டும் நகர மண்டப பகுதிக்குள் நுழைய முற்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் மீது, மீண்டும் 2வது தடவையாக கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் அவர்கள் மீண்டும் நகர மண்டப பகுதிக்குள் நுழைய முயற்சித்த வேளை, தாமரை தடாக பகுதியிலேயே வைத்து மீண்டும் 3வது முறையாகவும் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது

Fuel price reduced

அநுராதபுரம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு