உள்நாடு

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

(UTV | கொழும்பு) –

2022 ஆம் ஆண்டிற்கு மாத்திரம் லங்கா சீனி தனியார் நிறுவனத்தினால் ஊக்கத்தொகை மற்றும் கொடுப்பனவாக மாத்திரம் 73 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலுத்திப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லங்கா சீனி தனியார் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு செவனகல மற்றும் பெலவத்த சீனி நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக எழுபத்து மூன்று கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து இருபத்தாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவனகல பிரிவு மற்றும் தலைமை அலுவலகத்திற்கான கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக கடந்த வருடம் இருபத்தி இரண்டு கோடியே எண்பத்தேழு இலட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகிறது. அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்த வருடத்திற்கான கொடுப்பனவு தொகை இரண்டு கோடியே எண்பத்தி ஆறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட போதிலும், இருபது கோடியே ஒரு லட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாவிற்கும் அதிகளவான செலுத்தப்பட்டுள்ளமை கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் பெலவத்தை துறைக்கு செலுத்தக்கூடிய ஊக்கத்தொகை எட்டு கோடி என்ற போதிலும் 50 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி 40 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அதிகளவாக செலுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பிலான உண்மைத் தகவல்களை வெளிப்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

சஹ்ரான் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் (VIDEO))

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்