உலகம்

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!

(UTV | கொழும்பு) –

காசாவில் மூன்;று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள் யுத்த நிறுத்தம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

ஐக்கியநாடுகளை சேர்ந்த அதிகாரியொருவரும் மேற்குலகை சேர்ந்த அதிகாரியொருவரும் இதனை தெரிவித்துள்ளனர். மூன்று நாள் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டால் மோசமடையும் நிலைமையின் கீழ் வாழும் 2.3 மில்லியன் பாலஸ்தீன மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவது சுலபமாகும்.

கட்டார் எகிப்து அமெரிக்கா ஆகியநாடுகள் இணைந்து இந்த யுத்த நிறுத்தத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த வாரம் கெய்ரோவில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன சிஐஏயின் தலைவரும் இஸ்ரேலிய குழுவினரும் இதில் கலந்துகொண்டனர் என எகிப்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் – ட்ரம்ப் எச்சரிக்கை

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

editor

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்