உலகம்

சீனா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) –

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசாங்கத்தினால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் காணப்படுகின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா பிரச்சனை உலகளாவிய விநியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சீனா சரியான முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விடுவேன் – டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

editor

ஓமான் நாட்டிற்கு புதிய அரசர் நியமனம்