உள்நாடு

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

(UTV | கொழும்பு) –

கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். ஒக்கம்பிடிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் மூன்று கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்திச்சென்ற குற்றத்திலேயே குறித்த 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார். மொனராகலை பிரதேச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

இரு மருந்துகளுக்கு தடை