உள்நாடு

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் முடிவு!

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் உள்ளக விசாரணை மட்டுமே போதுமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய புனித மைக்கல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மெல்கம் கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டால், அரசியல் அழுத்தத்தின் கீழ் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆகவே, இவை அனைத்தும் வெளிப்படையான வழிமுறைகளின் மூலம் செய்யப்பட வேண்டும் என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2022 இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணை தேவை என பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தாமதமாகியதால் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் பல மாவட்டங்களில் மழை

ஜனாதிபதி செயலாளர் – சுகாதாரத் துறை பிரதானிகள் இடையே கலந்துரையாடல்

editor

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்