வகைப்படுத்தப்படாத

ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்காவிடின் பாரிய விளைவுகள் எற்படும் – அஸ்வர்

(UDHAYAM, COLOMBO) – ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

அண்மைய சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆலமெல்லாம் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக வல்ல அல்லாஹ்வை தூசித்தவர்கள் உலகத்தில் அழிவைத்தான் தண்டணையாகப் பெற்றுக் கொண்டார்கள். புனித கஃபாவை அழிக்க வந்த பீல் என்னும் யானைப் படையின் மீது சிறு குருவிகள் சிறு கற்களைப் போட்டு அழித்த வரலாற்றை உலகம் அறியும் என்று அல் – குர்ஆனிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாட்டில் இன்று அட்டகாசம் தலைக்கு மேல் சென்றுள்ளது. கலகொட அத்தே ஞானசாரத் தேரர் பொலன்னறுவையில் வல்ல அல்லாஹ்வையும், அல் – குர்ஆனையும் தூசித்து கடும் மோசமாகப் பேசி இருக்கின்றார்.

அதேவேளை பொலன்னறுவையில் இந்த நாட்டின் ஜனாதிபதி முஸ்லிம் பாடசாலை ஒன்றின் 3 மாடிக்கட்டடத்தினைத் திறந்து வைத்திருக்கின்றார். முஸ்லிம் பாடசாலை கட்டுவது நல்லது ஆனால் பாடசாலைகளை உடைப்பதற்கு இவர்கள் இந்த அட்டூழியக்காரர்கள் நாளை முன்வருவார்கள் என்ற அச்சம் முஸ்லிம் மத்தியிலே பரவலாக ஏற்பட்டுள்ளது.

Related posts

කාසියේ වාසිය ශ්‍රී ලංකාවට

Prevailing windy conditions likely to continue – Met. Department

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை