வகைப்படுத்தப்படாத

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை ஆராய விசேட குழு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அப்பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டது.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்மைவாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கை ஒரு மாத காலத்தினுள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்கள்; கலந்துகொண்டனர்.

Related posts

එබෝලා රෝගය ලොව පුරා පැතිරීමේ අවධානමක්

England win Cricket World Cup

කිලිනොච්චි ප්‍රදේශයේ මවක් සහ පුතෙක් ඝාතනයක්